மகளிருக்கு மாதம் ரூ.2,500 உரிமைத்தொகை எப்போது கிடைக்கும்? அமைச்சர் ஜெகதீஸ்வரி புதிய தகவல்!
தமிழக மகளிருக்கு மாதந்தோறும் வழங்கப்படும் மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000-ல் இருந்து ரூ.2,500 ஆக உயர்த்தப்படுவது எப்போது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில், உரிமைத்தொகை உயர்வுக்கான பணிகள் தொடங்கிவிட்டதாக அமைச்சர் ஜெகதீஸ்வரி தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் அக்டோபர் 31-ம் தேதி நடைபெற்ற நன்றி தெரிவிப்புக் கூட்டத்தில் பேசிய அவர், வங்கிக் கணக்குகளில் உள்ள குளறுபடிகள் சரிசெய்யப்பட்ட பிறகு மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 ஆக உயர்த்தி பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என்று கூறினார்.
மேலும், இந்தப் பணிகளை முதலமைச்சர் விஜய் தொடங்கிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். இதனால் தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை பெறும் பெண்கள் மத்தியில் புதிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
ஏற்கெனவே, ரூ.2,500 வழங்குவதற்கான நிர்வாகப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், வங்கிக் கணக்குப் புகார்கள் உள்ளிட்ட பிரச்சினைகள் சரிசெய்யப்பட்ட பிறகு உயர்த்தப்பட்ட தொகை வழங்கப்படும் என்றும் அமைச்சர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.எனினும், ரூ.2,500 உரிமைத்தொகை வழங்கப்படும் தொடக்கத் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.