இன்று தமிழகத்தில் MBBS, BDS தரவரிசைப் பட்டியல் வெளியீடு - அமைச்சர் அருண்ராஜ் வெளியிடுகிறார்!

 

தமிழகத்தில் 2026-27-ஆம் கல்வியாண்டிற்கான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலைச் சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் இன்று ஆகஸ்ட் 10ம் தேதி பிற்பகல் 3 மணியளவில் வெளியிடுகிறார்.

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 13,999 எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் இடங்கள் உள்ளன. நடப்பாண்டு நீட் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த 61,306 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 41,723 பேரும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 30,904 பேரும் என மொத்தம் 72,627 பேர் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர்.

15% அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான முதற்கட்ட கலந்தாய்வு கடந்த ஆகஸ்ட் 4-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் மீதமுள்ள 85% இடங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளின் அரசு/நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான முதற்கட்ட ஆன்லைன் கலந்தாய்வு ஆகஸ்ட் 13-ஆம் தேதி தொடங்கவுள்ளது.

சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்துள்ள மாற்றுத்திறனாளி மாணவர்கள், குறிப்பிட்ட அரசு மருத்துவக் கல்லூரி வாரியங்களிடம் இருந்து பெறப்பட்ட தகுதிச் சான்றுகளை ஆன்லைனில் பதிவேற்றம் செய்வதற்கான அவகாசம் ஆகஸ்ட் 11-ஆம் தேதி மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.