தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டிகள்.. இன்று டிக்கெட் விற்பனைத் தொடக்கம்!
10-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 2-வது கட்ட ஆட்டங்கள் நாளை முதல் சென்னையில் தொடங்கவுள்ள நிலையில், இதற்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 10.30 மணிக்குத் தொடங்குகிறது.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் போட்டிகள் நடைபெறவுள்ளன. நாளை ஆகஸ்ட் 18 செவ்வாய்க்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் கோவை கிங்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இறுதிப்போட்டி உட்படப் போட்டியின் 2-வது கட்ட ஆட்டங்கள் அனைத்தும் வரும் ஆகஸ்ட் 28-ஆம் தேதி வரை சென்னையில் தொடர்ந்து நடைபெறும்.
சேப்பாக்கம் மைதான கவுண்டர்களில் இன்று (ஆகஸ்ட் 17) காலை 10.30 மணி முதல் ரசிகர்கள் நேரடியாகத் சென்று டிக்கெட்டுகளைப் பெற்றுக் கொள்ளலாம். மைதான கவுண்டர் தவிர்த்து, District.in என்ற இணையதளம் மூலமாகவும் ஆன்லைனில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். ரசிகர்களின் வசதிக்காகக் குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.100 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.