அரசு பள்ளி மாணவர்களிடம் தேர்வு கட்டணம் வசூலிக்கக் கூடாது! உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு

 

 

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களிடம் தேர்வுக் கட்டணம் மற்றும் முறையற்ற பிற கட்டணங்களை வசூலிக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது.

இந்த நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, பள்ளிக்கல்வித்துறை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. இதன்படி, தங்கள் மாவட்டங்களுக்கு உட்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு உடனடியாக உரிய வழிகாட்டுதல்களை வழங்கும்படி  உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், உயர்நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவைப் பள்ளிகள் முறையாகப் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதனால் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களிடம் தேர்வுக் கட்டணம் அல்லது முறையற்ற கட்டணங்கள் வசூலிக்கப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் கட்டணம் தொடர்பான புகார்கள் எழாமல் கண்காணிக்க வேண்டிய பொறுப்பும் கல்வித்துறை அதிகாரிகளுக்கு உள்ளது.இந்த உத்தரவு அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்குப் பொருந்தும்.