மருத்துவக் கலந்தாய்வில் முக்கிய மாற்றம் - தமிழகத்தில் கூடுதலாக 250 எம்பிபிஎஸ் இடங்கள் சேர்ப்பு!
தமிழகத்தில் நடைபெறவுள்ள நடப்பாண்டு மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வில் மாணவர்களுக்குக் கூடுதல் வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் புதிய இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் 2026-27 ஆம் கல்வி ஆண்டிற்கான மருத்துவ மாணவர் சேர்க்கையின் இரண்டாம் கட்ட கலந்தாய்வு வரும் செப்டம்பர் 13-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த கலந்தாய்வில் பங்கேற்கும் நீட் மாணவர்களுக்குப் பயனளிக்கும் வகையில், கூடுதலாக சுமார் 250 எம்பிபிஎஸ் இடங்கள் கிடைக்க வாய்ப்பு உருவாகியுள்ளது.
புதிதாகத் தொடங்கப்பட உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றில் 150 இடங்களும், ஏற்கனவே இயங்கி வரும் இதர இரண்டு தனியார் மருத்துவக் கல்லூரிகளில் தலா 50 இடங்களும் என மொத்தம் 250 இடங்கள் கூடுதலாகக் கிடைக்கவுள்ளன. இதன் மூலம் மருத்துவப் படிப்பு கனவோடு காத்திருக்கும் மாணவர்களுக்குக் கூடுதல் இடங்கள் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.