தமிழகத்தில் அதிக வருமானம் ஈட்டும் டாப் 10 கோவில்கள்! ரூ.233.50 கோடியுடன் பழனி முதலிடம்
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், அதிக ஆண்டு வருவாய் ஈட்டும் முதல் 10 கோவில்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் ரூ.233.50 கோடி வருவாயுடன் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் முதலிடத்தில் உள்ளது. இந்த 10 கோவில்களின் மொத்த ஆண்டு வருவாய் ரூ.941.99 கோடியாகும்.
டாப் 10 கோவில்களின் வருவாய் விவரம்
-
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் – ரூ.233.50 கோடி
-
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் – ரூ.139.06 கோடி
-
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் – ரூ.131.38 கோடி
-
சமயபுரம் மாரியம்மன் கோவில் – ரூ.111.09 கோடி
-
திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவில் – ரூ.74.98 கோடி
-
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் – ரூ.73.72 கோடி
-
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் – ரூ.64.33 கோடி
-
ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோவில் – ரூ.50.57 கோடி
-
அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோவில் – ரூ.34.20 கோடி
-
சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோவில் – ரூ.29.16 கோடி
உண்டியல் காணிக்கை, கட்டணத் தரிசனம், பிரசாத விற்பனை, வாடகை உள்ளிட்ட வழிகளில் கோவில்களுக்கு வருவாய் கிடைக்கிறது. இந்த வருவாய் கோவில் திருப்பணிகள், அடிப்படை வசதிகள், அன்னதானம் மற்றும் தூய்மைப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் என அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.