தமிழகத்திற்கு நாளை மஞ்சள் எச்சரிக்கை வாபஸ்!

 

 

வங்கக்கடலில் உருவாகியுள்ள அக்வான் புயல் ஆந்திரா கடற்கரையை நோக்கி நகர்வதால், தமிழகத்திற்கு விடுக்கப்பட்டிருந்த கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் திரும்பப் பெற்றுள்ளது.

முன்னதாக, அக்வான் புயல் தெற்கு ஆந்திரப் பிரதேசம் அருகே கரையைக் கடக்கும் எனக் கணிக்கப்பட்டிருந்தது. இதனால் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

ஆனால், புயல் தற்போது வடக்கு ஆந்திரப் பிரதேசத்தை நோக்கி நகர்வதால் தமிழகத்தில் கனமழைக்கான வாய்ப்பு குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், புயலின் நகர்வு மற்றும் அதன் தாக்கம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.