ஆசிய விளையாட்டியில் வெள்ளி வென்ற தமிழக வீரர் அபய் சிங்கிற்கு ரூ.50 லட்சம் ஊக்கத்தொகை - முதல்வர் விஜய் அறிவிப்பு!

 

ஜப்பானில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில், ஸ்குவாஷ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள வீரர் அபய் சிங்கிற்குத் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அவரது வரலாற்றுச் சாதனையைப் பாராட்டும் வகையில், அரசு சார்பில் மாபெரும் ஊக்கத்தொகை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் வியக்கத்தக்க வகையில் போராடி வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றிய அபய் சிங்கின் சிறப்பான சாதனையைப் போற்றும் விதமாக, தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.50 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

அபய் சிங்கின் இந்த அபார வெற்றி தமிழகத்தின் இளம் தலைமுறை விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையிலும், மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகவும் அமைந்துள்ளதாகப் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவுரவ் கோஷலுக்குப் பிறகு ஆசிய விளையாட்டு ஸ்குவாஷ் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இரண்டாவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ள அபய் சிங்கின் சாதனையைத் தமிழக அரசு முறைப்படி கெளரவித்துள்ளது விளையாட்டு வட்டாரத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.