தங்கம் வென்றார் தமிழக வீரர் நீல் சாம்ராஜ் - ஒரே நாளில் இருமுறை தேசிய சாதனையை முறியடித்து வரலாறு படைத்தார்!

 

லூதியானாவில் நடைபெற்ற 21-வது தேசிய யூத் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த இளம் வீரர் நீல் சாம்ராஜ் ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் புதிய சாதனையைப் படைத்து அசத்தியுள்ளார்.

ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தின் அரையிறுதியில் பங்கேற்ற நீல் சாம்ராஜ், 10.53 வினாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து புதிய யு-18 தேசிய சாதனையை நிகழ்த்தினார். அதைத் தொடர்ந்து நடைபெற்ற இறுதிப்போட்டியில் தனது முந்தைய சாதனையை மேம்படுத்தி, 10.46 வினாடிகளில் இலக்கை எட்டி முதலிடம் பிடித்தார்.

ஒரே நாளில் இரண்டு முறை தேசிய சாதனையைத் தகர்த்ததுடன், இப்போட்டியில் தமிழகத்திற்குக் தங்கப்பதக்கத்தையும் வென்று பெருமை சேர்த்துள்ளார்.