தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம்... இன்று சட்டப்பேரவையில் தனித்தீர்மானம்!
அரசு பொது நிகழ்ச்சிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் தமிழ்த்தாய் வாழ்த்து முதன்மையாகப் பாடப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் இன்று தனித்தீர்மானம் கொண்டு வருகிறார்.
தமிழகத்தில் நடைபெறும் அரசு பொது நிகழ்ச்சிகள், பல்கலைக்கழக விழாக்கள் மற்றும் கல்வி நிறுவன நிகழ்வுகள் அனைத்திலும் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயமாக முதலாவதாகப் பாடப்பட வேண்டும் என்பதை இத்தீர்மானம் வலியுறுத்துகிறது.
மாநிலத்தின் மொழி மற்றும் பண்பாட்டு மரியாதையை உறுதிசெய்யும் வகையில், இந்த முக்கியத் தனித்தீர்மானத்தைச் சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் நேரடியாக முன்மொழிகிறார்.
சமீபத்தில் சில பொது நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பாக எழுந்த விவாதங்களின் பின்னணியில், இந்த விவகாரத்தில் தெளிவான நடைமுறையைச் சட்டப்பூர்வமாக உறுதிசெய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இத்தீர்மானத்தின் மீது அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் விவாதித்த பிறகு, இது ஒருமனதாக நிறைவேற்றப்படும் எனக் எதிர்பார்க்கப்படுகிறது.