தமிழக பட்ஜெட் இன்று தாக்கல்... தவெக அரசின் முதல் நிதி நிலை அறிக்கை!

 

 

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்றைய தினம் மாநிலத்தின் புதிய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் பட்ஜெட்டை நிதி அமைச்சர் மரிய வில்சன் இன்று காலை சரியாக 10 மணிக்குத் தாக்கல் செய்கிறார். அரசின் நிதி நிலைமையைக் கருத்தில் கொண்டும் பல்வேறு முக்கியத் திட்டங்களைச் செயல்படுத்தும் வகையிலும் இந்த நிதி அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் காலத்தில் பொதுமக்களுக்கு அளிக்கப்பட்ட பல்வேறு முக்கிய வாக்குறுதிகள் இந்த பட்ஜெட்டில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஒவ்வொரு குடும்பத் தலைவிக்கும் மாதந்தோறும் உதவித்தொகை வழங்கும் திட்டம் மற்றும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது. வெற்றித் தமிழகம் தொலைநோக்குத் திட்டம் போன்ற சிறப்புத் திட்டங்களும் இந்த பட்ஜெட்டின் மூலமாக அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பட்ஜெட் தாக்கல் நிகழ்வைத் தொடர்ந்து சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தலைமையில் அலுவல் ஆய்வுப் கூட்டம் நடைபெற்று கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடக்கும் என்பது அறிவிக்கப்படும். தமிழக சட்டப்பேரவையில் நாளை வேளாண் துறைக்கான தனி பட்ஜெட் அமைச்சர் வினோத்தால் தாக்கல் செய்யப்பட உள்ளது. அரசின் இந்த முதல் பட்ஜெட் அறிவிப்புகள் தமிழக மக்கள் மற்றும் அரசியல் வட்டாரங்கள் மத்தியில் மிகுந்த ஆவலை ஏற்படுத்தியுள்ளது.