பழுது பார்த்த லாரி மீது டேங்கர் லாரி மோதி தீப்பற்றியதில் 2 பேர் பலி!
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் பிலாத்தரைப் பகுதியில் லாரி ஒன்று பழுதாகி நின்றுகொண்டிருந்தது. அதைப் பழுது நீக்குவதற்காக அருகில் உள்ள ஒர்க் ஷாப்பில் இருந்து வந்த இரண்டு பேர் அந்த லாரிக்கு அடியில் வேலை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது அதே வழியாக வந்த டேங்கர் லாரி ஒன்று, நின்றுகொண்டிருந்த லாரி மீது எதிர்பாராதவிதமாக மோதியது. மோதிய வேகத்தில் லாரி திடீரெனத் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இந்த விபத்தில் லாரியின் அடியில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பேரும் படுகாயமடைந்தனர்.
அக்கம்பக்கத்தினர் உடனடியாக விரைந்து வந்து படுகாயமடைந்த இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எனினும், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவர்கள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் போராடித் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.