டாரஸ் லாரி மோதி இளம்பெண் பலி...  பெரும் சோகம்!

 

 

 

சென்னை குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் நிகழ்ந்த கோர விபத்தில், டாரஸ் லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

 

சென்னை குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் இருசக்கர வாகனத்தில் இரண்டு இளம் பெண்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது பின்னால் வந்த அதிவேக டாரஸ் லாரி எதிர்பாராதவிதமாக அந்த பைக் மீது மோதியது. இந்த விபத்தில் பைக் லாரியின் சக்கரத்தில் சிக்கிக் கொண்டதுடன், பைக்கை ஓட்டிச் சென்ற ஜமுனா (23) என்பவர் லாரியின் அடியில் சிக்கி சுமார் 50 அடி தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டார்.

இந்தத் கோர விபத்தில் படுகாயமடைந்த ஜமுனா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் பைக்கில் பின்னால் பயணித்த ஸ்ரீஜா என்பவர் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். உடனடியாக தகவலறிந்து வந்த போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார், காயமடைந்த ஸ்ரீஜாவை மீட்டுச் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.