தாசில்தார் அரசு வாகனத்தின் முன் நின்றி ரீல்ஸ்... பெரும் சர்ச்சை! 

 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வருவாய் வட்டாட்சியராகப் பணியாற்றி வருபவர் ஜமுனா ராணி. இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூர் மலைப் பகுதிக்குத் தனது அரசுப் பணி நிமித்தமாக ஆய்வு செய்யச் சென்றுள்ளார். அங்கு தனது ஆய்வை முடித்த பின்னர் தனக்கு வழங்கப்பட்ட அரசு வாகனத்தின் அருகே நின்றபடி அவர் ஒரு செயலைச் செய்துள்ளார்.

அரசு வாகனத்தின் அருகே நின்றவாறு சினிமா பாடலுடன் ஒரு காணொளியைப் பதிவு செய்து அதனைத் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் அவர் பதிவேற்றம் செய்துள்ளார். அரசுப் பணியின் போது எடுக்கப்பட்ட இந்தக் காணொளி இணையத்தில் வேகமாகப் பரவியதுடன் பொதுமக்களிடையே பெரும் விவாதத்தையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் குறித்துப் பல்வேறு தரப்பிலிருந்தும் கேள்விகள் எழுந்த நிலையில் வட்டாட்சியர் ஜமுனா ராணி தனது விளக்கத்தை அளித்துள்ளார். அதில் தான் அரசு வாகனத்தின் முன் நின்று காணொளி எடுத்துச் சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டது உண்மைதான் என்றும் ஆனால் அது பொழுதுபோக்குக் குறுங்காணொளி வடிவம் அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.