டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ்; அதிகபட்சம் ரூ.16,800 வழங்க உத்தரவு!

 

 

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் பணியாளர்களுக்கு 20 சதவீத போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி தகுதியுள்ள பணியாளர்களுக்கு அதிகபட்சமாக ரூ.16,800 கிடைக்க உள்ளது.

டாஸ்மாக் நிறுவனத்தில் பணிபுரியும் நிரந்தரப் பணியாளர்கள், அயல் பணிப் பணியாளர்கள், மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் உதவி விற்பனையாளர்களுக்கு இந்தத் தொகை வழங்கப்படுகிறது. 2025 ஏப்ரல் முதல் 2026 மார்ச் வரையிலான ஓராண்டு கால ஊதியத்தின் அடிப்படையில் போனஸ் கணக்கிடப்பட்டுள்ளது.

இதில் 8.33 சதவீதம் போனஸாகவும், 11.67 சதவீதம் கருணைத் தொகையாகவும் வழங்கப்படுகிறது. போனஸ் கணக்கீட்டுக்கான மாத ஊதிய உச்சவரம்பு ரூ.7,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் அதிகபட்சமாக ரூ.16,800 வழங்கப்படும்.

இந்தத் தொகையை நவம்பர் 4-ம் தேதியான இன்று பணியாளர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான நிதியை மாவட்ட மேலாளர்களின் செயல்பாட்டுக் கணக்குகளுக்கு அனுப்பி, தாமதமின்றி பணியாளர்களுக்கு வழங்க டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.