டாஸ்மாக் புகார்களுக்கு தனி வாட்ஸ்அப் எண், கட்டணமில்லா சேவை அறிமுகம்!
டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களுக்குக் கூடுதல் விலை வசூலிப்பது மற்றும் பிற குறைகளைத் தெரிவிக்க வாடிக்கையாளர்களுக்கான புதிய வாட்ஸ்அப் எண் மற்றும் சேவை மையத்தை டாஸ்மாக் நிர்வாகம் நடைமுறைப்படுத்தியுள்ளது.
டாஸ்மாக் கடைகள் தொடர்பான புகார்களைப் பதிவு செய்ய 7397720230 என்ற வாட்ஸ்அப் எண் அறிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் மதுபானக் கட்டணம் மற்றும் இதர புகார்கள் குறித்துத் தெரிவிக்க 1800 889 2015 என்ற கட்டணமில்லா எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.
இந்த வாடிக்கையாளர் சேவை மையம் 24 மணி நேரமும் முழுமையாகச் செயல்படும் எனவும், புகார்கள் மீது எவ்விதச் சமரசமுமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் தங்களது புகார்களை @TasmacOfficial என்ற அதிகாரப்பூர்வ எக்ஸ் தளம் மற்றும் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்கள் மூலமாகவும் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.