டாஸ்மாக் மதுபாட்டிலில் இறந்த வண்டுகள்... குடித்தவருக்கு வாந்தி,மயக்கம்...பெரும் பரபரப்பு!
Sep 5, 2026, 11:10 IST
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள டாஸ்மாக் கடையில் பேச்சிமுத்து என்பவர் மது வாங்கி அருந்தியுள்ளார். அந்த மதுவை அருந்திய சிறிது நேரத்திலேயே அவருக்கு திடீரென வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது.
தான் குடித்த மதுபாட்டிலில் இறந்த நிலையில் வண்டுகள் கிடப்பதை அவர் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்த நச்சு மதுவைக் குடித்ததால்தான் தனக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டதாக அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
உடன் இருந்த சக நண்பர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இது தொடர்பாகச் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் நிர்வாகத்திடம் முறைப்படி புகாரும் அளிக்கப்பட்டுள்ளது.