டாடா சன்ஸ் தலைவராக என்.சந்திரசேகரன் பதவிக்காலம் மீண்டும் நீட்டிப்பு - இயக்குநர் குழு ஏகமனதாக ஒப்புதல்!

 

டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக என்.சந்திரசேகரன் மேலும் 5 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து நீடிப்பார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராகப் பொறுப்பு வகித்து வரும் என்.சந்திரசேகரன், தனது பதவிக் காலத்தில் அடுத்த 5 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து அப்பதவியில் நீடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இவருடைய பதவிக் காலத்தை நீட்டிப்பதற்கான முன்மொழிவுக்குத் டாடா சன்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் குழு ஏகமனதாக ஒப்புதல் அளித்துத் தனது முழு ஆதரவைத் தெரிவித்துள்ளது.

கடந்த காலங்களில் இவருது சிறப்பான தலைமையின் கீழ் டாடா குழுமத்தின் பல்வேறு நிறுவனங்கள் அடைந்துள்ள வியத்தகு வளர்ச்சி மற்றும் நிதி நிலைத் தன்மையைக் கருத்தில் கொண்டு இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.