டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் ராஜினாமா!
Aug 12, 2026, 12:42 IST
டாடா குழுமத்தின் முக்கிய நிறுவனமான டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக பதவி வகித்து வந்த என். சந்திரசேகரன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டாடா சன்ஸ் நிறுவனத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் வருகிற 18-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், சந்திரசேகரனின் இந்த ராஜினாமா முடிவு மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.
சந்திரசேகரன் திடீரென ராஜினாமா செய்திருப்பதால், டாடா குழுமத்தில் புதிய தலைமை மாற்றம் ஏற்படும் சூழல் உருவாகும் என கூறப்படுகிறது. இந்த ராஜினாமா குறித்த கூடுதல் விவரங்கள் மற்றும் அடுத்த தலைவராக யார் நியமிக்கப்படுவார் என்பது தொடர்பான தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.