நெகிழ்ச்சி...  2 மாணவிகளுக்காக 5கிமீ நடந்தே மலையேறிச் சென்று பாடம் கற்பிக்கும் ஆசிரியர்!

 

 

மராட்டிய மாநிலம் கோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள மிகச்சிறிய மலைக்கிராமமான காவல்டெக் தங்கர்வாடாவில் வெறும் மூன்று வீடுகள் மட்டுமே உள்ள நிலையில் அங்கு மின்சாரம் மற்றும் சாலை வசதிகள் இல்லை.

allowfullscreen

இக்கிராமத்தைச் சேர்ந்த இரண்டு சிறுமிகளின் கல்வி பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக ஜீவன் மிதாரி என்ற அரசுப் பள்ளி ஆசிரியர் கரடுமுரடான மலைப்பாதையில் தினமும் நடந்து சென்று பாடம் கற்பித்து வருகிறார்.

காட்டெருமைகள் மற்றும் சிறுத்தைகள் நடமாடும் அடர்ந்த காட்டுப்பகுதியில் ஐந்து கிலோமீட்டர் தூரம் தன்னுயிரையும் பொருட்படுத்தாமல் தினமும் ஆபத்தான பயணத்தை அவர் மேற்கொண்டு வருவது பலரின் பாராட்டுக்களைப் பெற்றுள்ளது.