தெலங்கானா அமைச்சர் சுரேகா பதவி பறிப்பு - முதல்வர் ரேவந்த் ரெட்டி அதிரடி!
மகளின் சர்ச்சைப் பேச்சு காரணமாக, தெலங்கானா மாநில அமைச்சர் கொண்டா சுரேகாவை அவரது அமைச்சர் பதவியிலிருந்து நீக்குமாறு ஆளுநருக்கு முதல்வர் ரேவந்த் ரெட்டி கடிதம் எழுதியுள்ளார். இந்த நிகழ்வு காங்கிரஸ் கட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சர் கொண்டா சுரேகாவின் மகள் சுஷ்மிதா முதல்வர் ரேவந்த் ரெட்டி மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராகப் பகிரங்கமாகப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
கட்சி மற்றும் அரசுக்கு எதிராகத் தொடர்ந்த இத்தகைய நடவடிக்கைகளைக் கருத்தில் கொண்டு, அமைச்சர் கொண்டா சுரேகாவை உடனடியாகப் பதவியிலிருந்து நீக்குமாறு முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆளுநருக்குப் பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் இரு அமைச்சர்கள் பதவி விலகியதைத் தொடர்ந்து, தற்போது தெலங்கானாவிலும் காங்கிரஸ் அமைச்சரின் பதவி பறிக்கப்பட்டிருப்பது தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது.