சார்ஜ் போட்ட 10 நிமிடங்களில் வெடித்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்! நாலாபுறமும் பரவிய தீப்பிளம்புகள்... பகீர் வீடியோ!

 

 

தெலங்கானா மாநிலம் ஜக்தியால் மாவட்டத்தில் சார்ஜ் செய்யப்பட்டுக் கொண்டிருந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து தீப்பற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஜக்தியால் மாவட்டம் கோருட்லா நகரில் உள்ள சாயிராம்பூர் காலனியைச் சேர்ந்த என். லட்சுமிநாராயணன் என்பவர் தனது வீட்டின் முற்றத்தில் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை சார்ஜ் செய்துள்ளார். சார்ஜிங் தொடங்கிய சுமார் 10 நிமிடங்களிலேயே ஸ்கூட்டரில் இருந்து திடீரென பயங்கர சத்தம் கேட்டுள்ளது.

ఛార్జింగ్ పెట్టిన 10 నిమిషాలకే.. పేలిన ఎలక్ట్రిక్ స్కూటర్

జగిత్యాల జిల్లా కోరుట్లలోని సాయిరాంపూర్ కాలనీలో చోటు చేసుకున్న ఘటన

తన ఇంటి ఆవరణలోనే ఎలక్ట్రిక్ స్కూటర్‌కు చార్జింగ్ పెట్టిన బండి ఓనర్

చార్జింగ్ పెట్టిన 10 నిమిషాలకే భారీ శబ్దంతో పేలిన ఎలక్ట్రిక్ స్కూటర్

చూస్తుండగానే..… pic.twitter.com/e4CM0W674s

— PulseNewsBreaking (@pulsenewsbreak) September 29, 2026

இதையடுத்து வெளியே வந்து பார்த்தபோது, ஸ்கூட்டர் தீப்பற்றி எரிந்துகொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ வேகமாக பரவிய நிலையில், ஸ்கூட்டர் முழுவதுமாக எரிந்து சேதமடைந்தது. இந்த சம்பவத்தில் சுமார் ரூ.1 லட்சம் மதிப்புள்ள வாகனம் சேதமடைந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

வெடிப்பைத் தொடர்ந்து ஏற்பட்ட தீ மேலும் பரவாமல் தடுக்க உரிமையாளர் உடனடியாக நடவடிக்கை எடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அருகில் இருந்த வீட்டுப் பொருட்கள் மற்றும் வாகனங்களுக்கு பெரிய அளவில் சேதம் ஏற்படுவது தவிர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சார்ஜிங் தொடங்கிய சில நிமிடங்களிலேயே ஸ்கூட்டர் வெடித்தது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஸ்கூட்டர் வெடித்ததற்கான சரியான காரணம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. பேட்டரி கோளாறு அல்லது சார்ஜிங் தொடர்பான பிரச்சினை காரணமாக இருக்குமா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.எலக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்யும்போது உற்பத்தியாளர் வழங்கிய சார்ஜர் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டியதன் அவசியத்தையும் இந்த சம்பவம் மீண்டும் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளது.