சேலை வழங்கும் விழாவில் பங்கேற்ற பெண் உயிரிழப்பு - அமைச்சர் ரூ.5 லட்சம் நிதியுதவி!
தெலங்கானா மாநிலம் சித்திப்பேட்டை மாவட்டத்தில் நடைபெற்ற இந்திரம்மா பரோசா மற்றும் இந்திரம்மா சேலைகள் வழங்கும் அரசு விழாவில் பங்கேற்க வந்த பெண் ஒருவர் எதிர்பாராத விதமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
సిద్దిపేటలో ఇందిరమ్మ భరోసా, ఇందిరమ్మ చీరల ప్రారంభ కార్యక్రమానికి ఇందిరమ్మ చీరతోనే వచ్చి అసువులు బాసిన మహిళ.. సీఎం సభకు వచ్చి చనిపోయిన కొమ్ము సారవ్వ కుటుంబాన్ని పరామర్శించిన మంత్రి పొన్నం ప్రభాకర్.. కుటుంబానికి రూ.5లక్షల సాయం.. https://t.co/Fcm2FgQ0t0
— Prabhakar Venavanka (@Prabhavenavanka) November 20, 2026
சித்திப்பேட்டை மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகக் கொம்மு சரவ்வா என்ற பெண் வந்துள்ளார். இந்திரம்மா சேலையை அணிந்து மிகுந்த ஆர்வத்துடன் விழாவில் கலந்து கொண்ட அவர், அங்கு எதிர்பாராத விதமாக உயிரிழந்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாநில அமைச்சர் பொன்னம் பிரபாகர், உயிரிழந்த கொம்மு சரவ்வாவின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார்.மேலும், சரவ்வாவின் குடும்பத்துக்கு உதவும் வகையில் ரூ.5 லட்சம் நிதியுதவியை அமைச்சர் வழங்கியுள்ளார்