ஆற்றுக்குள் கவிழ்ந்த அரசுப் பேருந்து... 30 பயணிகள் படுகாயம்! தென்காசியில் பரபரப்பு!

 

 

தென்காசி அருகே வேட்டைக்காரன் குளம் பகுதியில் அரசுப் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 30 பயணிகள் படுகாயம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

பொதுமக்கள் உதவியுடன் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்றன. பேருந்தில் சிக்கியிருந்த பயணிகள் அனைவரும் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

விபத்து காரணமாக அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.