undefined

எல்லையில் போர்ப்பதற்றம்... ஸ்ரீநகரில் ராணுவத் தளபதி முக்கிய ஆலோசனை!

 

இந்தியாவில் ஏப்ரல் 22ம் தேதி காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. தற்போது  எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ராணுவத் தலைமை தளபதி உபேந்திர துவிவேதி ஸ்ரீநகருக்கு புறப்பட்டுச் சென்றார்.  

அங்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்யும் அவர், ராணுவ அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  ஜம்மு - காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.  

சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து, தூதரக அதிகாரிகள் வெளியேற உத்தரவு என அதிரடி அறிவிப்புகளுக்கு பதிலடி தரும் வகையில்  பாகிஸ்தானும் சிம்லா போர் நிறுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது.சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதை போராகவே கருதுவதாகவும் பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஜம்மு - காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் இன்று அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். 

இதற்கு இந்திய வீரர்களும் பதிலடி கொடுத்துள்ளனர். போர்ப் பதற்றத்துக்கு மத்தியில், ஸ்ரீநகர் மற்றும் உதம்பூரில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக ராணுவத் தளபதி புறப்பட்டுச் சென்றுள்ளார்.பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால், பதிலடி கொடுப்பது குறித்து ராணுவ அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட இருப்பதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!