கலெக்டர் ஆபீஸில் பரபரப்பு.. காவலரைத் தாக்கிய தவெக நிர்வாகி கைது!

 

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பணியில் இருந்த காவலரை மதுபோதையில் தாக்கிய தமிழக வெற்றிக் கழகத்தின்  நிர்வாகியைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காவலர் வினோத் என்பவர் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தார். அவர் தேநீர் அருந்திக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த 'தவெக' நிர்வாகியான ராஜேஷ் என்பவர் மதுபோதையில் அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

தகராறு முற்றிய நிலையில் காவலர் வினோத்தை, ராஜேஷ் கொடூரமாகத் தாக்கியுள்ளார். இச்சம்பவம் குறித்துப் பாதிக்கப்பட்ட காவலர் அளித்த புகாரின் பேரில் போலிஸார் வழக்குப் பதிவு செய்தனர். தாக்குதலை நடத்திவிட்டுத் தலைமறைவாக முயன்ற தவெக நிர்வாகி ராஜேஷைப் போலீசார் தீவிரமாகத் தேடி உடனடியாகக் கைது செய்தனர்.

பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் மீதே, அதுவும் ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே மதுபோதையில் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் திருவாரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.