தாய்லாந்தில் பதற்றம்.. திருவிழாவில் குண்டுவெடிப்பு.. 3 பேர் பலி.. 50 பேர் படுகாயம்!
தாய்லாந்தின் தக் மாகாணத்தில் உள்ள உம்பாங்கில் ஆண்டு தோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், இந்த ஆண்டும் விழா தொடங்கிய நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். அப்போது, விழாவில் பங்கேற்ற இரு பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சிலர், கூட்டத்தின் மீது வெடிகுண்டை வீசினர். பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் மக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர்.
இந்த வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர் மற்றும் 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அவர்களை மீட்பு படையினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. இதையடுத்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் படுகோன் சினவத்ரா ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!