நெல்லையில் பதற்றம்.. தலை துண்டிக்கப்பட்டு இளைஞர் கொடூரமாக படுகொலை!
திருநெல்வேலி மணிமூர்த்தீஸ்வரம் பகுதியில் பாஸ்கர் என்ற இளைஞர் மர்ம நபர்களால் தலை துண்டிக்கப்பட்டு மிகக் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், குற்றவாளிகள் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.
திருநெல்வேலி மணிமூர்த்தீஸ்வரம் பகுதியில் பாஸ்கர் என்ற இளைஞர் மர்ம நபர்களால் தலை துண்டிக்கப்பட்டு மிகக் கொடூரமான முறையில் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.
பட்டப்பகலில் அரங்கேறியுள்ள இந்தத் தலை துண்டிப்புப் படுகொலைச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் தொடர்புடைய அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் பொன்ராஜ் ஆகிய இருவரும் ரத்தக்கறை படிந்த அரிவாளுடன் தச்சநல்லூர் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று சரணடைந்துள்ளனர்.
சரணடைந்தவர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருவதுடன், இக்கொலைக்கான உண்மையான காரணம் முன்விரோதமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.