சென்னையில் மீண்டும் பயங்கரம்... உயிருக்கு ஆபத்து என காவல் ஆய்வாளர் மீது புகாரளித்த இளைஞர் தலை சிதைக்கப்பட்டு படுகொலை!

 

சென்னையில் தவெக பிரமுகர் அடையாறு பகுதியில் வெட்டிக் கொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த பரபரப்பும் அதிர்ச்சியும் அடங்குவதற்குள் அடுத்த அதிர்ச்சியாக தலை சிதைக்கப்பட்டு இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை திருவொற்றியூர் பகுதியில் சாலையில் வைத்து பிரதீப் என்ற இளைஞர் தலை சிதைக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக இளைஞர் பிரதீப் வீடியோ வெளியிட்ட அடுத்த நாளே கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.

<a style="border: 0px; overflow: hidden" href=https://youtube.com/embed/5OX5Ow98sQE?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/5OX5Ow98sQE/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" title="YouTube video player" width="560">

திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் தன்னை நேரில் அழைத்து மிரட்டியதாகக் கடந்த முன்தினம் பிரதீப் புகார் தெரிவித்திருந்தார். தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக அவர் குறிப்பிட்டிருந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில், நேற்று மர்ம கும்பல் ஒன்று அவரைச் திருவொற்றியூரில் நடுரோட்டில் வைத்து வழிமறித்துக் கொடூரமாகப் படுகொலை செய்துள்ளது.

காவல்துறையின் மீது புகார் தெரிவித்த இளைஞர் அடுத்த நாளே படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகிவிட்டதாக எதிர்க்கட்சிகள் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைக்க வழிவகுத்துள்ளது.