இஸ்ரேல் தூதரகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல்; 3 பேர் சுட்டுக்கொலை!

 

மத்திய கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

நேற்று மதியம் சுமார் 12:15 மணியளவில் (உள்ளூர் நேரம்), இஸ்தான்புல்லின் பெஷிக்டாஸ் மாவட்டத்தில் உள்ள லெவன்ட் வணிகப் பகுதியில் அமைந்துள்ள இஸ்ரேல் தூதரகக் கட்டிடத்திற்கு வெளியே இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

வாடகை கார் ஒன்றில் வந்த மூன்று மர்ம நபர்கள், ராணுவ உடை அணிந்து கொண்டு, நீண்ட தூரத் துப்பாக்கிகள் மற்றும் கைத்துப்பாக்கிகளுடன் திடீரெனத் தாக்குதலைத் தொடங்கினர்.

அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த துருக்கி போலீசார் மற்றும் சிறப்புப் படையினர் உடனடியாகச் செயல்பட்டுப் பதிலடி கொடுத்தனர். பல நிமிடங்கள் நீடித்த இந்தத் துப்பாக்கிச் சண்டையில், காரில் வந்த மூன்று பயங்கரவாதிகளும் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.