டெஸ்லா காரை  ஏரித் தண்ணீருக்குள் இறக்கி  விபரீத சோதனை... மஸ்க் சொன்னதை நம்பி ஏமாந்த நபர்... வைரல் வீடியோ!

 

உலகின் முன்னணி கோடீஸ்வரரான இலான் மஸ்க், தனது டெஸ்லா நிறுவனத்தின் மின்சாரக் கார்கள் தண்ணீரில் மிதக்கும் தன்மையுடையவை என்றும், குறுகிய காலத்திற்கு அதனை ஒரு படகு போலப் பயன்படுத்த முடியும் என்றும் சில காலத்திற்கு முன்பு குறிப்பிட்டிருந்தார். இதனை அப்படியே உண்மையாக நம்பிய டெஸ்லா கார் உரிமையாளர் ஒருவர், அதனை நேரில் சோதித்துப் பார்க்க முடிவு செய்துள்ளார். இந்த விபரீத முயற்சியை அவர் தனது மொபைல் போனில் வீடியோவாகவும் பதிவு செய்துள்ளார்.

இந்த விபரீத சோதனையால் பல கோடிகள் மதிப்புள்ள அந்த சொகுசு மின்சாரக் கார் முற்றிலும் பழுதடைந்து ஏரித் தண்ணீருக்குள் மூழ்கிய நிகழ்வு, தற்போது சமூக வலைதளங்களில் வீடியோவாக வெளியாகிப் பெரும் வைரலாகி வருகிறது. நிறுவனத் தலைவர்கள் விளம்பரத்திற்காகக் கூறும் கருத்துக்களை அப்படியே நம்பி, இது போன்ற ஆபத்தான சோதனைகளில் இறங்கக் கூடாது எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்தச் சம்பவம் நவீனத் தொழில்நுட்பக் கார்களின் பாதுகாப்பு வரம்புகளை நமக்கு எச்சரிக்கையாக உணர்த்துகிறது.