சேப்பாக்கத்தில் தல அஜீத்... விண்ணை பிளந்த ரசிகர்கள் கோஷம்!
தமிழ் திரையுலகில் நட்சத்திர தம்பதிகளான அஜீத் ஷாலினி இருவரும் தங்களது 25 வது திருமண நாளை கொண்டாடி அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தனர். இந்த வீடியோ வைரலான நிலையில் தற்போது சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை - ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியை நடிகர் அஜித் குமார் குடும்பத்தினருடன் கண்டுரசித்தார். தல தல என கரகோஷத்தால் சேப்பாக்கம் மைதானமே அதிரத் தொடங்கியது.
பொதுவாகவே நடிகர் அஜித் பொது இடங்களில் கூட்டம் கூடும் இடங்களில் தலைகாட்ட மாட்டார். தற்போது பல வருடங்களுக்கு பிறகு முதல் முறையாக பொதுமக்கள் அதிகம் கூடும் ஐபிஎல் போட்டியை கண்டு களிக்க நேரில் வருகை தந்துள்ளார். சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை - ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியை குடும்பத்தினருடன் கண்டு ரசித்தார். அப்போது மைதானத்தில் தல தல கோஷம் அதிர்ந்தது. ஏற்கனவே தோனியை கிரிக்கெட் ரசிகர்கள் செல்லமாக தல தோனி என அழைக்கும் நிலையில் பல வருடங்களாக தமிழ் சினிமா ரசிகர்களால் தல என்றழைக்கப்படும் அஜித்குமார் ஒரே இடத்தில் சங்கமித்ததால் மைதானத்தில் சத்தம் விண்ணை பிழந்தது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!