“அது தான் கடைசி போட்டி...” சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து முஷ்பிகுர் ரஹீம் ஓய்வு அறிவிப்பு!

 

வங்காளதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முஷ்பிகுர் ரஹீம், 2027 பிப்ரவரியில் இங்கிலாந்துக்கு எதிராக மிர்பூரில் நடைபெறவுள்ள முதல் டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக வங்காளதேச கிரிக்கெட் வாரியத் தலைவர் தமிம் இக்பால் அறிவித்துள்ளார்.

2027 பிப்ரவரி மாதம் இங்கிலாந்து அணிக்கு எதிராக மிர்பூரில் நடக்கும் முதல் டெஸ்ட் போட்டி, முஷ்பிகுர் ரஹீமின் கடைசி சர்வதேசப் போட்டியாக அமையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்காளதேச கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு முஷ்பிகுர் ரஹீம் ஆற்றிய பங்களிப்பு நீண்ட காலம் நினைவுகூரப்படும் என வாரியத் தலைவர் தமிம் இக்பால் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த 2005-ஆம் ஆண்டு லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அறிமுகமான முஷ்பிகுர் ரஹீம், இதுவரை 108 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 14 சதங்களுடன் 7,062 ரன்கள் குவித்துள்ளார்.