72-வது தேசிய விருதுகள் அறிவிப்பு... எந்தெந்த மொழிகளில் யார் யாருக்கு விருது? முழுமையான லிஸ்ட்!
மத்திய அரசு 72-வது தேசிய திரைப்பட விருதுகளை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்திய அளவில் முக்கியத் திரையாளுமைகள் ஜூரியாகச் செயல்பட்டு, 2024-ஆம் ஆண்டில் தணிக்கை சான்றிதழ் பெற்ற சிறந்த படைப்புகளைத் தேர்வு செய்துள்ளனர்.
தமிழகத்தில் இருந்து முழுநீள திரைப்படங்களுக்கான பிரிவில் நடன இயக்குநர் கலா மாஸ்டரும், குறும்படங்கள் மற்றும் ஆவணப் படங்கள் பிரிவில் இயக்குநர் இ.வி.கணேஷ் பாபுவும் ஜூரியாகப் பங்கேற்றுள்ளனர். இந்த அறிவிப்பில் தமிழ் மற்றும் தென்னிந்தியத் திரைப்படங்கள் பல்வேறு முக்கிய விருதுகளை அள்ளிச் சாதனை படைத்துள்ளன.
தமிழ் சினிமா வென்ற விருதுகள்
சிறந்த தமிழ்த் திரைப்படம்: ராயன் (இயக்கி நடித்தவர்: தனுஷ்)
சிறந்த இயக்குநர்: ராஜ்குமார் பெரியசாமி (அமரன்)
சிறந்த பின்னணி இசை: ஜி.வி.பிரகாஷ் குமார் (அமரன்)
சிறந்த படத்தொகுப்பு: கலைவாணன் (அமரன்)
சிறந்த நடிகருக்கான சிறப்பு விருது: தனுஷ் (கேப்டன் மில்லர்)
சிறந்த துணை நடிகை: சாச்சனா நமிதாஸ் (மகாராஜா)
சிறந்த சண்டைப் பயிற்சி: அனல் அரசு (மகாராஜா)
சிறந்த ஒலிக்கலவை சிறப்பு விருது): சுரேன் (மெய்யழகன்)
பிற முக்கியப் பிரிவுகள் மற்றும் பிற மொழித் திரைப்படங்கள்
சிறந்த நடிகர்: மம்முட்டி (பிரம்மயுகம் - மலையாளம்)
சிறந்த நடிகை: யாமி கௌதம் (ஆர்ட்டிகல் 370 - இந்தி)
மிகச்சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படம்: கல்கி 2898 ஏ.டி (தெலுங்கு)
சிறந்த திரைக்கதை (Screenplay): புஷ்பா 2 (தெலுங்கு)
சிறந்த ஆடை வடிவமைப்பு (Costume Design): ஷீத்தல் (புஷ்பா 2)
சிறந்த திரைக்கதை வசனம் (Dialogues): வெங்கீ அட்லூரி (லக்கி பாஸ்கர் - தெலுங்கு)
சிறந்த ஒளிப்பதிவு (Cinematography): பிரம்மயுகம் (மலையாளம்)
சிறந்த அறிமுக இயக்குநர்: ரந்தீப் ஹூடா (சுதந்திர வீரசாவர்க்கர் - இந்தி)
சிறந்த இந்தித் திரைப்படம்: ஸ்ரீகாந்த் (இயக்குநர்: துஷார் ஹிராந்தானி)
சிறந்த மலையாளத் திரைப்படம்: பெமினிச்சி பாத்திமா (இயக்குநர்: ஃபாசில் முகமது)
சிறந்த கன்னடத் திரைப்படம்: மித்யா (இயக்குநர்: சுமந்த் பட்)
சிறப்புப் பிரிவுகள் (சமூக நலம் & இசை)
சமூக மற்றும் தேசிய நலனுக்கானத் திரைப்படம்: கேப்டன் மில்லர் (தமிழ்)
சிறந்த பெண் பின்னணிப் பாடகி: வைக்கம் விஜயலட்சுமி (பாடல்: 'அங்கு வான கோனிலு' – திரைப்படம்: ஏ.ஆர்.எம் - மலையாளம்)
குறும்படங்கள் பிரிவு (Non-Feature Film)
சிறந்த ஒலி வடிவமைப்பு (Sound Design): 'BLUE' (தமிழ்க் குறும்படம்)