அமெரிக்காவின் 'ஆபிரகாம் லிங்கன்' போர்க்கப்பல் தாய்லாந்திலிருந்து புறப்பட்டது!
Sep 7, 2026, 08:10 IST
அமெரிக்க கடற்படையின் அதிநவீன விமானம் தாங்கி போர்க்கப்பலான 'ஆபிரகாம் லிங்கன்', தாய்லாந்தின் பட்டாயா அருகே உள்ள லேம் சபாங் துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டு நிறுத்தப்பட்டிருந்தது.
மத்திய கிழக்குப் பகுதியில் ஈரானுக்கு எதிரான போர்க்கால நடவடிக்கைகளில் நீண்ட நாட்களாகத் தீவிரக் கடற்பயணத்தில் ஈடுபட்டிருந்த இக்கப்பல், சுமார் 5,000 மாலுமிகள் மற்றும் கடற்படை வீரர்களுடன் தாய்லாந்தின் பிரபல சுற்றுலா நகரமான பட்டாயாவில் 5 நாட்கள் தங்கியிருந்தது.
தொடர்ச்சியான கடல் பணிக்குப் பிறகு, மாலுமிகளுக்கு அளிக்கப்பட்ட இந்த ஓய்வுக்காலத்திற்குப் பின் அப்பேரகப்பல் தனது அடுத்தகட்ட பயணத்தை மீண்டும் வெற்றிகரமாகத் தொடங்கியுள்ளது.