undefined

சோதனையில் சிக்கிய நடிகர்... சட்டவிரோதமாக வெளிநாட்டு மதுபானம் விற்றதாக கைது!

 

வெளிநாட்டு மதுபானங்களை சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்ததாக நடிகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மதுபானம் தேவைப்படுபவர்களுக்கு, தேவையான மது வகைகளை தனது காரில் எடுத்துச் சென்று நடிகர் ஒருவர் சப்ளை செய்திருப்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. காரில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மதுபானங்கள் மற்றும் பீர்பாட்டில்கள் ஏராளமாக இருந்தன.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் திருரங்காடி பகுதியை சேர்ந்தவர் ஷெபிக். இவர் ஏராளமான மலையாள திரைப்படங்களில் சிறிய வேடங்களில் நடித்து வந்தார். "ஆட்டோர்ஷா" என்ற மலையாள படத்தில் அறிமுகமான இவர், "ஆக்ஷன் ஹீரோ பிஜூ" என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடத்திருக்கிறார். இந்நிலையில் சம்பவத்தன்று நள்ளிரவு நேரத்தில் அவர் தனது காரில் எர்ணாகுளம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு கலால் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் நடிகர் ஷெபிக் காரிலும் சோதனை செய்தனர்.

அவரது காரில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மதுபானங்கள் மற்றும் பீர்பாட்டில்கள் ஏராளமாக இருந்தன. அதனை விற்பனை செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டது, கலால் துறை அதிகாரிகளின் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து நடிகர் ஷெபிக்கை கலால் அதிகாரிகள் கைது செய்தனர். அவரது காரில் இருந்த இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானம் 52 லிட்டர் மற்றும் 58 பாட்டில் பீர் (37.7 லிட்டர்) ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அவரது காரும் பறிமுதல் செய்யப்பட்டது. மலையாள திரைப்படங்களில் தொடர்ந்து சிறிய வேடங்களில் நடித்து வந்த நடிகர் ஷாபிக், இரவு நேரத்தில் மதுபான விற்பனையில் ரகசியமாக ஈடுபட்டு வந்திருக்கிறார். அவர் மதுபானம் தேவைப்படுபவர்களுக்கு, தேவையான மது வகைகளை தனது காரில் எடுத்துச் சென்று சப்ளை செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அவ்வாறு மதுபானங்களை விற்பனை செய்வதற்கு எர்ணாகுளம் சென்ற போது தான், கலால் துறையினரின் சோதனையில் சிக்கிக்கொண்டார்.