செப்டம்பர் 8 வரை சட்டமன்றக் கூட்டத்தொடர் - சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவிப்பு!

 

தமிழகச் சட்டப்பேரவையின் 2026-27 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் செப்டம்பர் 8-ம் தேதி வரை நடைபெறும் எனப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக் குழுவுக் கூட்டத்தில் கூட்டத்தொடரை செப்டம்பர் 8ம் தேதி வரை நடத்தத் தீர்மானிக்கப்பட்டது.

மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் மற்றும் முக்கியச் சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளதால், தேவைப்பட்டால் மாலை 6 மணி வரையிலும் பேரவை நடவடிக்கைகள் தொடரும் எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் மற்றும் பார்வையாளர்கள் சட்டமன்ற விவாதங்களை நேரடியாகத் தெரிந்துகொள்ளும் வகையில், இந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் அனைத்து நிகழ்வுகளும் தொலைக்காட்சிகள் மற்றும் இணையதளங்களில் முழுமையாக நேரலை  செய்யப்படும் எனச் சபாநாயகர் உறுதி அளித்துள்ளார்.