இணையத்தில் வைரலாகும் காதல் ஜோடியின் அட்ராசிட்டி.. ஷாக்கான காவல்துறை..!

 
சாலை விதிகளை மீறி பயணித்த காதல் ஜோடிகளின் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஹபூர் மாவட்டம், தேசிய நெடுஞ்சாலை சிம்போலி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் ஜோடி ஒன்று பயணம் செய்து வந்தது. இதில்  இளம்பெண் தனது காதலனின் முன்புறம் அமர்ந்து, அவரை கட்டியணைத்தபடி வாகனத்தில் சாலை விதிகளை மீறி பயணம் செய்துள்ளனர்.

இருசக்கர வாகனத்தில் இளம்ஜோடி சாலை விதியை மீறி பயணித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.