undefined

திடீரென இடிந்து விழுந்த பால்கனி சுவர்... அப்பளமாக நொறுங்கிய ஆட்டோ!

 

தமிழகத்தின் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை பெரம்பூரில் 70 ஆண்டு பழமையான வீட்டின் முதல் மாடி பால்கனி இடிந்து விழுந்து விபத்திற்குள்ளனாது.

இதில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்து ஆட்டோ சுக்கு நூறாக நொறுங்கியது. சென்னை பெரம்பூர் தீட்டித் தோட்டம் 7வது தெருவில் வசித்து வருபவர் பாபு மன்சூர். இவருடைய வீடு 70 ஆண்டுகள் பழமையானது.    

இந்நிலையில், செவ்வாய்கிழமை மாலை திடீரென வீட்டின் முதல் தளத்தின் பால்கனி திடீரென பயங்கர சப்தத்துடன் இடிந்து விழுந்தது. அப்போது, வீட்டின் கீழே நின்று கொண்டிருந்த ஆட்டோ மீது சுவர்கள் விழுந்ததால் ஆட்டோ அப்பளம் போல் நொறுங்கியது.  

இது குறித்து தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் மீட்புப் பணியில் ஈடுபட்டனா். போலீசார் பழமை வாய்ந்த கட்டடத்தை சீர் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வீட்டில் உரிமையாளருக்கு அறிவுறுத்தினர்.

அத்துடன்  சேதமடைந்த ஆட்டோவை பழுது பார்க்க கூறினர். சமரச பேச்சு வார்த்தைக்கு பிறகு வீட்டின் உரிமையாளர் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் இருவரும் உடன்பட்டனர். பால்கனி இடிந்து விழுந்தது மாலை நேரமாக இருந்தாலும், அந்த பகுதியில் யாரும் இல்லாததாலும் அதிா்ஷ்டவசமாக உயிா்ச் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!