160 அடி... ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுவன்... மீட்பு பணிகள் தீவிரம்!
ராஜஸ்தான் மாநிலம் தவுசா மாவட்டத்தில் நங்கல் கிராமத்தில் 5 வயது சிறுவன் ஒருவன் வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்தான். திடீரென அருகில் இருந்த 160 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். இதையடுத்து, அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
சிறுவனை மீட்க முடியாததால், மீட்பு படை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். நேற்றிரவு முதல் தற்போது வரை 5 வயது சிறுவனை மீட்கும் முயற்சியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து மீட்பு படை அதிகாரி "சிறுவன் 120 – 150 அடி ஆழத்தில் சிக்கியுள்ளான். சிறுவனின் உடல்நிலை சீராக உள்ளது. தொடர்ந்து ஆக்சிஜன் கொடுக்கப்பட்டு வருகிறது” எனக் கூறியுள்ளார்.
மேலும், தேசிய, மாநில மீட்பு படையினர் சிறுவனை மீட்பதற்கு நீண்ட நேரம் போராடி வருகின்றனர். ஜே.சி.பி மூலம் அருகில் குழி தோண்டும் பணியும் நடந்து வருவதாக தெரிவித்தார். குழந்தையின் நிலையை கண்காணிக்க ஆழ்துளை கிணற்றில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. சுமார் 160 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணறு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தோண்டப்பட்டு இருந்த நிலையில், மோட்டார் சிக்கியதால் மூடப்படாமல் அப்படியே கிடப்பதாக அப்பகுதியினர் விளக்கம் அளித்தனர்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!