பகீர் வீடியோ... 165 அடி  உயர பாலத்தில் இருந்து  பள்ளத்தில் பாய்ந்த பேருந்து... 45 பேர் துடிதுடித்து பலி!

 
 

தென்னாப்பிரிக்காவின் வடக்கு மாகாணமான லிம்போபோவில் உள்ள மோரியா என்ற நகரத்திற்கு, ஈஸ்டர் திருநாள் கொண்டாட்டத்திற்காக பயணிகளுடன் சென்ற பேருந்து ஒன்று மாமட்லகலாவில் உள்ள பாலத்தை கடக்கும் போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 45 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.  அதிர்ஷ்டவசமாக 8 வயது சிறுமி மட்டும் படுகாயங்களுடன் உயிரிடன் மீட்க்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

<a href=https://youtube.com/embed/BNMsAG839LE?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/BNMsAG839LE/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" title="Bus crash in South Africa kills 45 people" width="640">

முதற்கட்ட விசாரணையில், போட்ஸ்வானாவில் இருந்து லிம்போபோவில் உள்ள மோரியா என்ற நகரத்திற்கு, ஈஸ்டர் திருநாள் கொண்டாட்டத்திற்காக அந்த பேருந்து பயணிகளை ஏற்றிச் சென்றது தெரிய வந்துள்ளது. தென்னாப்ரிக்கா நாட்டின் மிகப்பெரிய சர்ச்களில் ஒன்றான சியோன் கிறிஸ்டியன் சர்ச்சின் தலைமையகமான மோரியாவிற்கு, அவர்கள் புனிதப் பயணம் மேற்கொண்டதாக தெரிகிறது.

இதனிடையே, விபத்திற்கு தென்னாப்ரிக்கா அதிபர் சிரில் ரமபோசா இரங்கல் தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்கர்கள் வெள்ளி மற்றும் திங்கட்கிழமைகளில் பொது விடுமுறையுடன் நான்கு நாட்கள் வார இறுதிக்கு தயாராகி கொண்டிருந்தபோது இந்த சோகம் ஏற்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்