“முதல்வர் போதையில் இருக்கக் கூடாது”.. பஞ்சாப் CM-ஐ விமர்சித்த ராகுல் காந்தி

 

பஞ்சாப் மாநிலம் சங்ரூரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில், ஆம் ஆத்மி கட்சியின் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானைக் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாகச் சாடியுள்ளார்.

பஞ்சாபில் போதைப்பொருள் பழக்கத்தை முற்றிலும் ஒழிப்பதாக வாக்குறுதி அளித்து ஆட்சியைப் பிடித்த ஆம் ஆத்மி அரசு, அந்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் முற்றிலும் தோல்வியடைந்துள்ளதாகக் குற்றம்சாட்டினார்.

பகவந்த் மான் நாடாளுமன்ற உறுப்பினராக (MP) இருந்த காலத்தில், காலை 11 மணிக்கே அவரிடம் மது வாடை வீசியதைச் சுட்டிக்காட்டிய ராகுல் காந்தி, "ஒரு மாநிலம் போதைப்பழக்கத்திலிருந்து விடுபட வேண்டும் என்றால், அதன் முதல்வரே மது அருந்தக்கூடாது" என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.

பஞ்சாபில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து வரும் சூழலில், ஆம் ஆத்மி அரசின் நிர்வாகச் சீர்கேடே இதற்குக் காரணம் எனத் தனது தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ராகுல் காந்தி சுட்டிக்காட்டியுள்ளார்.