வைரலாகும் ‘க்யூட்’ கம்பினேஷன்... த்ரிஷாவுக்கு முத்தம் கொடுத்த குஷ்பு!
தென்னிந்தியத் திரையுலகின் எவர்கிரீன் நாயகிகளான குஷ்பு மற்றும் த்ரிஷா ஆகிய இருவரின் அன்பான தருணம் அடங்கிய புதிய புகைப்படம் ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து, இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
திரைத்துறையில் நீண்ட கால நட்பைப் பகிர்ந்து வரும் நடிகையும் அரசியல் பிரமுகருமான குஷ்பு, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த நெகிழ்ச்சியான புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அந்தப் புகைப்படத்தில், நடிகை த்ரிஷாவை குஷ்பு மிகவும் அன்போடு அரவணைத்து, அவரது கன்னத்தில் முத்தம் கொடுக்கும் நெகிழ்ச்சியான காட்சி பதிவாகியுள்ளது.
இந்த அழகிய புகைப்படத்தைப் பகிர்ந்த குஷ்பு, அதன் கீழ் த்ரிஷாவைக் குறிக்கும் வகையில் 'அழகி ❤️' என்று பாசத்தோடு பதிவிட்டுள்ளார்.
சமீப நாட்களாகவே சமூக வலைதளங்களில் நடிகை த்ரிஷா தொடர்பான செய்திகளும் புகைப்படங்களும் தொடர்ந்து பேசுபொருளாகி வருகின்றன. கடந்த ஜூன் 22-ஆம் தேதி தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் நடிகை த்ரிஷாவுடன் இணைந்து பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடிய பிரத்யேகப் புகைப்படம் இணையத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் ட்ரெண்டானது.
அந்தப் பரபரப்பு ஓய்வதற்குள், தற்போது மூத்த நடிகை குஷ்பு, த்ரிஷா மீது பொழியும் பாசப் புகைப்படம் வெளியாகியுள்ளது ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. இப்புகைப்படத்தைப் பார்த்த சினிமா ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள், தமிழ் சினிமாவின் இருவேறு காலகட்டத்து மகாராணிகள் ஒரே ஃபிரேமில் இருப்பதாகக் கூறி, லைக்குகளைக் குவித்துத் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
அதே சமயம், கெனிஷாவுக்கு தவறு என்று வாதிட்டு, ஒப்பாரி வைத்து அழுது அரற்றிய குஷ்பு, இப்போ த்ரிஷாவுக்கு மட்டும் வக்காலத்து வாங்குகிறார். இது தான் உங்க நியாயமா என்று ரசிகர்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர்.