"அதிமுகவை ஏன் தொட்டோம் என முதல்வர் விஜய் கதறும் நாள் வரும்" - ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

 

அதிமுகவை விமர்சித்த முதலமைச்சர் விஜய்க்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.பி.உதயகுமார், "அதிமுகவை ஏன் தொட்டோம் என்று முதலமைச்சர் விஜய் கதறும் நாள் விரைவில் வரும்" என எச்சரித்தார். அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தவர்கள் அனைவரும் காலாவதியானவர்கள் என்று குறிப்பிட்ட அவர், அதிமுக என்பது தண்ணீரில் கரையும் சர்க்கரை கரைசலோ அல்லது உப்புக்கரைசலோ அல்ல எனவும் திட்டவட்டமாகக் கூறினார்.