ஞானேஷ் குமாருக்கு கொடுக்கப்பட்ட கெடு நிறைவு.. அக். 2 முதல் நாடு தழுவிய போராட்டம் - காக்ரோச் கட்சி அறிவிப்பு!

 

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று காக்ரோச் ஜனதா கட்சி நிர்ணயித்த கெடு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, காந்தி ஜெயந்தி முதல் நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என காக்ரோச் ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் தீப்கே 48 மணி நேரக் கெடு விதித்திருந்தார். அந்தக் கெடு தற்போது நிறைவடைந்துள்ளது.

தேர்தல் ஆணையர் பதவி விலகாததைத் தொடர்ந்து, மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2-ஆம் தேதி முதல் மும்பையில் தொடங்கி நாடு முழுவதும் தீவிரப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்று CJP தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கும், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளைச் சீர்படுத்துவதற்கும் மற்றும் வெளிப்படைத்தன்மையைக் கோருவதற்கும் இப்போராட்டம் அவசியமானது என அக்கட்சி தனது அதிகாரப்பூர்வ 'X' சமூக வலைதளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.