சொந்த வீடு கனவுக்கு ஆபத்து... எகிறும் சிமெண்ட் விலை... மீண்டும் உயரும் அபாயம்!
தமிழகத்தில் கட்டுமானப் பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தற்போது மூலப்பொருள்களின் வரத்துக் குறைந்துள்ளதன் காரணமாகச் சிமெண்ட் விலை மேலும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஜல்லி, எம்-சாண்ட், பி-சாண்ட், சிமெண்ட் மற்றும் இரும்புக் கம்பிகள் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலை கடந்த சில ஆண்டுகளில் 40 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இதனால் நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்களின் சொந்த வீடு கட்டும் கனவு கேள்விக்குறியாகியுள்ளது.
கடந்த 2025-ஆம் ஆண்டில் ஜிஎஸ்டி வரி நீக்கப்பட்டபோதிலும் சிமெண்ட் விலையில் பெரிய அளவில் நுகர்வோருக்குப் பலன் தரும் வகையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தற்போது மூலப்பொருள்களின் வரத்துக் குறைந்துள்ளதால், நிறுவனங்கள் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளன.
கச்சா எண்ணெய் விலையில் சாதகமான மாற்றங்கள் ஏற்பட்டால் மட்டுமே சிமெண்ட் துறையில் முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரிக்கும் எனவும், அடுத்த சில ஆண்டுகளில் இந்தத் துறையில் பெரிய அளவிலான மாற்றங்கள் எவையும் எதிர்பார்க்கப்படவில்லை எனவும் சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.