undefined

  அரசு பேருந்தை ஓட்டியபடி ரீல்ஸ் வெளியிட்ட டிரைவர், கண்டக்டர் டிஸ்மிஸ்!

 


தமிழகத்தில் அரசு பேருந்தை ஓட்டியபடி ரீல்ஸ் வெளியிட்ட டிரைவர் , கண்டக்டர் இருவரும் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர்.  சென்னை வடபழநியில் மாநகர பேருந்தை  அதன் டிரைவர் இயக்கிய படி  கையில் செல்போனுடன் வந்த கண்டக்டர், அந்த காட்சியை ரீல்ஸ் வீடியோவாக எடுத்துள்ளார். அதோடு நிற்காமல் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு உள்ளார்.

allowfullscreen


இந்த ரீல்ஸ் வீடியோ வைரலாகி வருவதோடு  பணியில் இருக்கும் போது டிரைவர், கண்டக்டர் செல்போன் பயன்படுத்தக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. அந்த விதி என்ன ஆனது என்பது குறித்த  கேள்வியும் எழுந்துள்ளது. இந்த வீடியோ போக்குவரத்து துறை உயர் அதிகாரிகள் கவனத்துக்குச் சென்றது.  


வீடியோ விவகாரம் வைரலானதை அடுத்து, அந்த பேருந்தை இயக்கிய  டிரைவர், கண்டக்டர் இருவரும் பணிநீக்கம் செய்யும்படி  ஒப்பந்த நிறுவனத்துக்கு போக்குவரத்து துறை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஒப்பந்த பணியாளர்களான இருவரும் பணிநீக்கம் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!