வைரல் வீடியோ!! ரசிகர்கள் மீது மைக்கை எறிந்த பிரபல பாப் பாடகி!!
பிரபல பாப் இசைப்பாடகி கார்டி பி. இவர் உலகம் முழுவதும் இசைக்கச்சேரிகளை நடத்தி வருகிறார். இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். அந்த வகையில் அமெரிக்காவில் நடைபெற்ற கச்சேரி ஒன்றில் கார்டி பி மேடையில் நடனமாடிக் கொண்டே பாடிக் கொண்டிருந்தார். அப்போது ரசிகர்களின் அருகே வந்து அவர் பாடியபோது கூட்டத்தில் இருந்த சிலர் அவர் மீது குளிர்பானத்தை வீசி எறிந்தனர்.
ரசிகர்கள் உற்சாகத்தில் அப்படி செய்தனர். ஆனால் இந்த செயலால் அதிர்ச்சி அடைந்த கார்டி பி தான் வைத்திருந்த மைக்கை அவர்களை நோக்கி வீசி எறிந்தார். குளிர்பானங்களை வீசியவர்களை உடனடியாக அங்கிருந்த பாதுகாவலர்கள் சுற்றி வளைத்தனர். பின்னர் அவர்களை அங்கிருந்து அழைத்து சென்று விசாரணை நடத்தினர். கார்டி பி மீது ஒருவர் குளிர்பானத்தை எதற்காக வீசினார்? அவர் மீது தாக்குதல் நடத்தவா?
வேறு ஏதும் தனிப்பட்ட காரணங்களா?என பல கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டது. கச்சேரியின்போது பாடகர்கள் ரசிகர்களால் தாக்கப்படுவது ஒன்றும் புதிதில்லை. கடந்த மாதம் வேல்ஸில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது பாடிக்கொண்டிருந்த கார்டி பி மீது ரோஜா பூங்கொத்துகளை ரசிகர்கள் வீசி எறிந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?