ஓணம் பண்டிகை.. ஈரோடு வழியாக சென்னை - கொல்லம் சிறப்பு ரயில் அறிவிப்பு!

 

ஓணம் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் கூடுதல் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, சென்னை சென்ட்ரல் - கொல்லம் இடையே ஈரோடு வழியாக வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாகச் சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.சென்னை சென்ட்ரல் - கொல்லம் சிறப்பு ரயில் (வண்டி எண்:

ஆகஸ்ட் 13ம் தேதி முதல் செப்டம்பர் 5 வரை (வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் - வாரத்திற்கு இருமுறை).06117) இரவு 11:50 மணிக்குச் சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு, மறுநாள் மாலை 4:20 மணிக்குக் கொல்லம் சென்று சேரும். கொல்லம் - சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் (வண்டி எண்: 06118): ஆகஸ்ட் 14 முதல் செப்டம்பர் 6 வரை (வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் - வாரத்திற்கு இருமுறை). மாலை 6:45 மணிக்குக் கொல்லத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 11:35 மணிக்குச் சென்னை சென்ட்ரல் வந்து சேரும்.

இந்தச் சிறப்பு ரயில்கள் ஈரோடு ரயில் நிலையம் வழியாக இயக்கப்படுவதால், சென்னை மற்றும் கேரள மாநிலம் கொல்லம் இடையே பயணிக்கும் மேற்கு மாவட்டப் பயணிகள் மற்றும் ஓணம் பண்டிகைக்கு ஊர் திரும்பும் பொதுமக்களுக்குப் பெரும் பயனுள்ளதாக அமையும்.