உலகக் கோப்பை கால்பந்துப் போட்டி.. போர்ச்சுகல் கேப்டனாக களமிறங்கும் ரொனால்டோ!
2026 உலகக் கோப்பை கால்பந்து தொடர் நெருங்கி வரும் வேளையில், போர்ச்சுகல் தேசிய அணியை நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மீண்டும் கேப்டனாக வழிநடத்த உள்ளார். இது அவர் பங்கேற்கும் 6-வது உலகக் கோப்பைத் தொடர் என்ற வரலாற்று சாதனையாக அமையவுள்ளது.
உலகக் கோப்பைக்கு தயாராகும் விதமாக, போர்ச்சுகல் அணி இன்று சிலிக்கு எதிராக ஒரு நட்பு ரீதியிலான பயிற்சிப் போட்டியில் விளையாட உள்ளது. போர்ச்சுகல் எலக்ட்ரிக் வெர்சஸ் சிலி இன்று ஜூன் 6ம் தேதி இரவு 11:15 மணிக்கு போர்ச்சுக்கல் நாட்டில் எஸ்டாடியோ நேஷனல் மைதானத்தில் நடைபெறுகிறது.
சர்வதேச ஆண்கள் கால்பந்து வரலாற்றில் அதிக போட்டிகளில் விளையாடியவர் (226 போட்டிகள்) மற்றும் அதிக கோல்களை அடித்தவர் (143 கோல்கள்) என்ற உலக சாதனைகளை ரொனால்டோ தன் வசம் வைத்துள்ளார்.
பயிற்சியாளர் ராபர்டோ மார்டினெஸ் தலைமையிலான போர்ச்சுகல் அணி, தனது கடைசிப் போட்டியில் அமெரிக்காவை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தி வலுவான நிலையில் உள்ளது. போர்ச்சுகல் அணி தனது முதல் உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் காங்கோ குடியரசு அணியை எதிர்கொள்ள உள்ளது.
சிலிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் அணியின் பல்வேறு வியூகங்களையும், வீரர்களின் சேர்க்கையையும் சோதித்துப் பார்க்க பயிற்சியாளர் திட்டமிட்டுள்ளார். இதனால் இந்த ஆட்டத்தில் ரொனால்டோ மற்றும் அவரது சக வீரர்கள் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.